அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருமழப்பாடி, வைத்தியநாத சுவாமி கோவிலில் உள்ள நந்திக்கு பங்குனி புனர்பூசம் நட்சத்திரத்தில் திருமண விழா நடக்கும். இவ்வாண்டு பங்குனி 22ல் (ஏப்.4) நந்திக்கும், சுயம்பிரகாசைக்கும் நடக்கிறது. இதைக் காணும் திருமணமாகாத ஆண்களுக்கும் பெண்களுக்கும் விரைவில் திருமணம் கூடி வரும் என்பர். நந்தி கல்யாணம் கண்டால் முந்திக் கல்யாணம் என்பது சொல் வழக்கு. இவ்விழாவைக் காண்போர் இல்லத்தில் மகிழ்ச்சி, ஒற்றுமை நிலவும். சுபநிகழ்ச்சிகள் நடக்கும். இந்தக் கோவிலுக்கு அரியலூர், தஞ்சாவூர் மற்றும் லால்குடியில் இருந்து துõரம் 28 கி.மீ.,