பதிவு செய்த நாள்
09
மார்
2017
01:03
புதுச்சேரி: திருவாரூர் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான, தியாக பிரும்மம் 250ம் ஆண்டு மாசி மாத ஜெயந்தி விழா, புதுச்சேரியில் இன்று (9ம் தேதி) நடக்கிறது. தியாகபிரும்மம் அவதரித்த பூச நட்சத்திர நாளில், ஒவ்வொரு தமிழ் மாதமும் சித்திரை மாதம் முதல் முக்கிய ஊர்களில் ஜெயந்தி விழா நடந்து வருகிறது. தினமலர் இணை ஆசிரியரும், மும்மூர்த்திகள் ஜெயந்தி விழாக்குழு கவுரவ ஆலோசகருமான முனைவர் ஆர்.ராமசுப்பு தலைமையிலான விழாக்குழு சார்பில், கோவிந்தபுரம், ஸ்ரீரங்கம், திருவையாறு, காரைக்கால், கோவை, எட்டயபுரம், தஞ்சாவூர், திப்பிராஜபுரம், வடலுார் ஆகிய ஊர்களில் விழா மற்றும் இசை நிகழ்ச்சி நடந்தது. புதுச்சேரியில், இன்று 9ம் தேதி மாலை ௬.௦௦ மணிக்கு, சங்கர வித்யாலயா மேல்நிலைப் பள்ளி அரங்கில், ஜெயந்தி விழாக்குழு பொதுச் செயலாளர் பக்தவத்சலம் வழங்கும், புதுச்சேரி பைரவி சபா மற்றும் வீணை விதுாஷி லஷ்மிதுரைசாமி அறக்கட்டளையினர் இணைந்து நடத்தும் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. மதுரை டி.என்.எஸ். கிருஷ்ணா பாட்டு, டில்லி சுந்தரராஜன் வயலின், திருவாரூர் பக்தவத்சலம் மிருதங்கம், வைக்கம் கோபாலகிருஷ்ணன் கடம் ஆகியோரின் இசை நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை, விழாக்குழுவினர் செய்துள்ளனர்.