பதிவு செய்த நாள்
09
மார்
2017
01:03
திருப்பூர்: திருப்பூர் வீரபாண்டி, கல்லாங்காடு சொல்காத்த அம்மன் கோவிலில், பூச்சாட்டு பொங்கல் விழா நடைபெற்றது. இக்கோவில் ஆண்டு விழா மற்றும் பூச்சாட்டு பொங்கல் விழா, கடந்த, பிப்.,26ல், பூச்சாட்டுத டன் துவங்கியது. தொடர்ந்து கம்பம் நடுதல், காப்பு கட்டுதல், தீர்த்தக்குட ஊர்வலம், சக்தி கும்பம் அழைத்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நேற்று முன்தினம் இரவு, முத்தையன் கோவிலில் இருந்து பக்தர்கள் பூவோடு எடுத்து வந்து வழிபட்டனர். பின்னர், படைக்கலம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது.நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யா ம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார். கோவில் வளாகத்தில், பெண்கள் பொங்கல் வைத்தும், ஊர்வலமாக மாவிளக்கு எடுத்தும் வந்தனர். இன்று, மஞ்சள் நீராடுதல், அம்மன் திருவீதி உலா நடக்கிறது. நாளை, பால் குட ஊர்வலம், அம்மன் அலங்கார பூஜை, அன்னதானம் நடக்கிறது.