பதிவு செய்த நாள்
09
மார்
2017
01:03
பொங்க ார்: பொங்க ார் பூசாரிபாளையம் மாகாளியம்மன் கோவில் பொங் கல் விழாவில், நேற்று திருக்கல்யா உற்சவம் நடைபெற்றது.பொங்கல் திருவிழா, கடந்த மாதம், 21ம் தேதி, பூச்சாட்டு விழாவுடன் துவங்கியது. நிச்சய தாம்பூலம், அபிஷேக ஆராதனைகளை தொடர்ந்து, கம்பம் வெட்டுதல், பொட்டுச்சாமிக்கு மா விளக்கு எடுத்தல், பூவோடு கோவில் சுற்றி வருதல், பூவோடு கம்பத்தில் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.அதை தொடர்ந்து, மாவிளக்கு, சிறப்புபூஜை, மாகாளியம்மன், பட்டத்தரசியம்மன் பொங் கல் விழா, கும்பம் மற்றும் கம்பம் கங்கை சேருதல் ஆகியன நடந்தன.இன்று, மஞ்சள் நீராடல் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.