காணும் இடமெல்லாம் சக்தியடா எனப் பாடிவைத்தார்கள் நம் பெரியவர்கள். அதற்கேற்ப மரம், செடி, கொடி முதலான எல்லாவற்றிலும் இறைவனைக் கண்ட நம் முன்னோர், மரத்தாலும் உலோகங்களாலும் இறை திருவுருவங்களை வடித்து வழிபடத் துவங்கினார்கள். அத்தகைய வழிபாடுகளால் விளையும் பலன்களையும் விளக்கியுள்ளார்கள். மரம் அல்லது களி மண்ணால் செய்த விக்கிரகத்தை வழிபட்டு வந்தால் ஆயுள் பலம் கூடும்.
சந்தனக் கட்டை: செல்வம் சேரும். கருங்கல் விக்கிரகம்: அதிகாரம் மற்றும் உடல்நலம் பெறலாம். தங்க விக்கிரகம்: வசதி வாய்ப்பு மற்றும் ஆரோக்கியம் பெருகும். வெள்ளி விக்கிரகம்: பெயரும் புகழும் கிடைக்கும். செம்பு விக்கிரகம்: குழந்தைப்பேறு கிட்டும். பஞ்சலோக விக்கிரகம்: சகல தடைகளும் நீங்கும்.