திருக்கோஷ்டியூரில் மாசித் தெப்ப உற்சவம்: தீபம் ஏற்றி வழிபட்ட பெண்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மார் 2017 10:03
திருப்புத்துார், திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்சவத்தை முன்னிட்டு தெப்பக்குளக்கரையில் பெண்கள். தீபம் ஏற்றி வழிபட்டனர்.
நாளை (மார்.12) இரவு தெப்பம் நடைபெறுகிறது. இன்று பெருமாள் வெண்ணெய் தாழி சேவையில் வீதி வலம் வருகிறார். சிவகங்கை சமஸ்தானக் கோயிலான சவுமியநாராயணப்பெருமாள் கோயில் மாசித் தெப்ப உற்சவம் 11 நாட்கள் நடைபெறுகிறது. இன்று காலை 7:00 மணி அளவில் வெண்ணெய் தாழி அலங்காரத்தில் பெருமாள் கோயிலிலிருந்து திருவீதி புறப்பாடு துவங்கி தெப்ப மண்டபம் எழுந்தருளுவார்.தொடர்ந்து தெப்பம் முட்டுத் தள்ளுதல் நடைபெறும்.இரவு 9:30 மணிக்கு மண்டபத்திலிருந்து திருவீதி புறப்பாடு நடைபெறும். நாளை காலை 6:10 மணி அளவில் பெருமாள் தேவியருடன் சர்வ அலங்காரத்தில் தங்கப்பல்லக்கில் புறப்பாடாகி தெப்ப மண்டபம் எழுந்தருளுவார். தொடர்ந்து பகல் 11:56 மணிக்கு பகல் தெப்பம் நடைபெறும். பின்னர் இரவில் 10:00 மணிக்கு இரவு தெப்பம் சுற்றல் நடைபெறும். மார்ச் 13ல் தீர்த்தவாரியுடன் உற்சவம் நிறைவடையும்.