திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மார் 2017 10:03
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், பவுர்ணமி தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும், லட்சக்கணக்கான பக்தர்கள், கிரிவலம் சென்று சுவாமி தரிசனம் செய்வர். இந்த மாத பவுர்ணமி இன்று இரவு, 8:58 மணிக்கு துவங்கி, நாளை இரவு, 8:52 மணி வரை உள்ளது. இந்த நேரத்தில், பக்தர்கள் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.