திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சைவ சமய ஸ்தாபித லீலை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மார் 2017 11:03
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி ஆறாம் திருவிழாவை முன்னிட்டு சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை நிகழ்ச்சி நடந்தது. நேற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் பரங்குன்றீஸ்வரர், ஆவுடை நாயகியும், மற்றொரு வெள்ளி ரிஷப வாகனத்தில் கோவர்த்தனாம்பிகை, தங்க மயில் வாகனத்தில் சுவாமி, தெய்வானை, பல்லக்கில் திருஞான சம்பந்தரும் 16கால் மண்டபம் முன்பு எழுந்தருளினர். அங்கு கோயில் ஓதுவாரால், சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலைக்கான பாடல்கள் பாடப்பட்டன. தீபாராதனை முடிந்து சுவாமி வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலித்தார்.