பதிவு செய்த நாள்
15
மார்
2017
03:03
பகவானின் சன்னிதியில் திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அவர்கள் செய்கிறார்கள். இதில் இரண்டு விஷயங்களைச் சொல்லலாம். சாஸ்திரோக்தமாக பிராமணர்களின் திருமணம் போல், அக்னி முகம், கன்னிகாதானம், பாணிக்ரஹணம், சப்தபதி என்றெல்லாம் செய்து திருமணம் பண்ணும்போது, அதை கோயில்களில் செய்யும் வழக்கம் கிடையாது. மற்றவர்களின் திருமணங்களில் இந்தப் பழக்கங்கள் எல்லாம் விடுபட்டு விட்டன. பெரும்பாலான திருமணங்களில் சில பழக்கங்கள் கிடையாது. இந்து தர்மத்தில் ஐந்து விஷயங்கள் மிக முக்கியமானது. கன்னியை பேசி முடிப்பது அதாவது, நிச்சயம் செய்வது, பையனை மகாவிஷ்ணுவாகவோ அல்லது சிவனாகவோ வரிப்பது, கன்னிதானம் செய்வது, பாணிக்கிரகணம், அதாவது கை பிடிப்பது.
அக்னியை வலம் வருவது, ஏழு அடி எடுத்து வைக்கும் சப்தபதி செய்வது வாக்தானஞ் ச ப்ரதாணஞ்ச வரதம் பாணி பீடனம். இது சாஸ்திரங்களில் பொதுவான விதி. திருமணம் என்றால் இந்த ஐந்து அங்கம் இருக்க வேண்டும். இது எல்லாருக்கும் பொது. இதுதான் திருமணத்தில் முக்கியமானது. பெரும்பாலான இடங்களில் சொல்லப்போனால், இவற்றை எல்லாம் உண்மையாகச் செய்வதில்லை. பகவானின் சன்னிதானத்தில் செய்தால் ஒரு நம்பிக்கை. பகவான் முன்னால் செய்திருக்கிறோம். எனவே, நன்றாக இருக்கும் என்று ஒரு நம்பிக்கைதான். இதை குற்றம் என்று சொல்ல முடியாது. சில இடங்களில் பிரார்த்தனையாகவும் செய்கிறார்கள். அதாவது, பகவானின் சன்னிதியில் வந்து கல்யாணம் செய்கிறேன் என்று பிரார்த்திக் கொண்டு செய்வார்கள். இதில் குறை எதுவும் இல்லை. வழக்கத்தில் உள்ளதுதான். தவறில்லை