உடம்பெனும் மனையகத்து உள்ளமே தகளியாக மடம்படும் உணர்நெய் அட்டி உயிரெனும் திரிமயக்கி உடம்படு ஞானத்தீயால் எரிகொள இருந்து நோக்கில் கடம்பமர் காளைதாதை கழலடி காணலாமே
(தகளி - அகல்)
(கடம்பமர் காளை - கடம்பு மாலை அணிந்த முருகன்) உடம்பு
கோயிலாக மாறும் மனம் இறைவனுக்கு அடிமையாக வேண்டும். வாய்மையே தூய்மையாக
வேண்டும். வாய்மை இருந்தால் அவாவின்மை தானே வரும். ஆசைகள் அகலும்போது
துன்பங்கள் குறையத் தொடங்குகிறது. கஷ்டம் இருகாரணங்களினால் உண்டாகிறது.
முற்பிறவிப்பயன், இப்பிறவியில் செய்த செயல். இவற்றால்தான் கஷ்டங்கள்
வருகின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். கஷ்டத்தைக் கண்டு கவலைப்
படுவதால், கஷ்டம் எக்காரணத்தைக் கொண்டும் எவ்வழியிலும் நீங்காது.
கவலைப்படுவதால், நரம்பு தளர்ச்சி, ரத்தம் கெட்டு அது சம்பந்தமான பல நோய்கள்
தான் வரும்.