மயிலம்:மயிலம் சுப்பரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் நடந்தது.மயிலம் ஸ்ரீவள்ளி, தெய்வானை, சுப்பரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 26ம் தேதி துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் சூரசம்ஹாரம் நடந்தது. காலை 6 மணிக்கு சிறப்பு பூஜைகளும், காலை 11 மணிக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது. பிற்பகல் 1 மணிக்கு மூலவர் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இரவு 9 மணிக்கு வேல் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சிவபெரு மானிடம் அழியாத வரம் பெற்ற பத்மாசூரனை போரில் வதம் (சூரசம்ஹாரம்) செய்து, ஆட் கொண்ட புராண நிகழ்ச்சியை தெருக் கூத்து கலைஞர்கள் நாடமாக அரங்கேற்றினர். பின்னர் இரவு 11 மணிக்கு நடந்த சிறப்பு வழிபாட்டில் ஆயிரக்கணக் கான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவில் மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்ட சுவாமிகள், திருமடத்தை சேர்ந்த குமாரசிவ சிவக்குமார், விஸ்வநாதன் கலந்து கொண்டனர்.