திருக்கோவிலுார் : திருக்கோவிலுார்‚ மணம்பூண்டி‚ ரகூத்தமர் பிருந்தாவனத்தில் சோமவார அமாவாசையை முன்னிட்டு‚ சிறப்பு வழிபாடு நடந்தது. சோமவார அமாவாசை தினமான நேற்று முன்தினம்‚ மணம்பூண்டி ரகூத்தமர் கோவில் வளாகத்தில் உள்ள அரசமரத்தை ஏராளமான பக்தர்கள் வலம்வந்து‚ நாகலிங்கத்திற்கு சிறப்பு வழிபாடு செய்தனர். அதிகாலை 5:30 மணியில் இருந்து மாலைவரை வழிபாடு நடத்தினர். தொடர்ந்து ரகூத்தமர் மூல பிருந்தாவனத்தையும், பக்தர்கள் வலம்வந்து வழிபட்டனர்.