பாலா திரிபுரசுந்தரி கோவிலில் வசந்த கால மகா நவராத்திரி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மார் 2017 12:03
செம்பாக்கம்: பாலா திரிபுரசுந்தரி அம்மன் கோவிலில், 6ம் ஆண்டு வசந்த கால மகா நவராத்திரி விழா நடைபெறுகிறது.திருப்போரூர் அடுத்தசெம்பாக்கம் கிராமத்தில், பாலா திரிபுரசுந்தரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு, கடந்த ஆண்டில், 9 அடி மூலிகை அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இக்கோவிலில், ஆண்டு தோறும் வசந்த கால நவராத்திரி விழா நடைபெறுவது வழக்கம். அதுபோல், இந்தாண்டிற்கான விழா, 27ம் தேதி துவங்கியது. ஒன்பது நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், அம்மனுக்கு ஒவ்வொரு நாளும், மஹாலட்சுமி அலங்காரம், மஹாகாளி அலங்காரம், ஞானசரஸ்வதி அலங்காரம் உள்ளிட்ட, ஒன்பது அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெறும். இதை தொடர்ந்து, இரவில் இசை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.