உசிலம்பட்டி, உசிலம்பட்டி-ஆண்டி பட்டி கணவாய் மலைப்பகுதியில் உள்ள துாய வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் சிலுவைத் திருவிழா நடந்தது. மதுரை உயர் மறை மாவட்ட பேராயர் அந்தோணிபாப்புசாமி, உதவி பங்குத்தந்தைகள் சிலுவை மைக்கேல், ஜான்மார்ட்டின், ஜான்திரவியம் மற்றும் தேனி மாவட்ட 13 ஆலயங்களில் இருந்து கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். சிலுவை திருயாத்திரை, சிறப்பு திருப்பலியும் நடந்தன.