தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திர பெருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மார் 2017 02:03
மதுரை, மதுரை நேதாஜி ரோடு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில், ஏப்., 4 - 10 வரை பங்குனி உத்திர பெருவிழா நடக்கிறது.கோயில் நிர்வாக அதிகாரி சக்கரையம்மாள் கூறியதாவது: ஏப்., 4ல் அதிகாலை 5:00 மணிக்கு வழக்கம் போல் ஹோமம், பூஜைகள் நடக்கும். மாலை 4:00 மணி பூக்கூடாரம் அலங்காரம் செய்யப்படுகிறது.பக்தர்கள் 51 ரூபாய் கட்டணம் செலுத்தி, அன்று மாலை 6:00 மணிக்கு நடக்கும் திருவிளக்கு பூஜையில் பங்கேற்கலாம். ஏப்., 9 இரவு மாசி வீதிகளில் சுவாமி உலா, மறுநாள் காலை அன்னதானம் நடைபெறும், என்றார்.