பதிவு செய்த நாள்
03
நவ
2011
10:11
நாமக்கல்: நாமக்கல்-மோகனூர் சாலையில் உள்ள ஐயப்பன் கோவிலில், வரும் 7ம் தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது.இக்கோவிலில் குபேர கணபதி, வள்ளி தேவஸேனா சமேத சுப்ரமணியன். வெங்கடாஜலபதி, குருவாயூரப்பன், சஞ்சீவி ஆஞ்சநேயர், பத்மாவதி தாயார், தட்சிணாமூர்த்தி, நவகிரகங்கள் மற்றும் துர்க்கை அம்மன் ஆகிய பரிவாக தெய்வங்கள் மிகுந்த பொருட்செலவில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டது.திருப்பணி அனைத்தும் முடிவடைந்த நிலையில், வரும் 7ம் தேதி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. விழாவை முன்னிட்டு, நாளை (நவ., 4) அதிகாலை 5 மணிக்கு மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்துவரப்படுகிறது. 5ம் தேதி மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, தீபாராதனை, கோமாதா பூஜையும், அங்குரார்ப்பணம், கும்பாலங்காரம், கும்பங்களை பாலாயத்தில் இருந்து யாகசலைக்கு அழைத்து வருதல், முதறகால யாக பூஜை ஆரம்பம், கலசங்கம் வைத்தல், பூர்ணாகுதியும் நடக்கிறது. நவம்பர் 6ம் தேதி திருமுறை பாராயணம், இரண்டாம் காலயாக பூஜை, திரவிய ஹோமங்கள், பதினெட்டாம்படி தர்ம சாஸ்தாவிற்கு இரண்டாம் கால பூர்ணாகுதி, தீபாராதனையும் மூன்றாம் கால யாகபூஜை, பூர்ணாகுதியும் நடக்கிறது. 7ம் தேதி காலை 8.30 மணிக்கு கடம் யாகசாலையில் இருந்து மூலாலய பிரவேசம், காலை 9.30 மணிக்கு கோபுர கலச கும்பாபிஷேகம், பரிவார தெய்வங்கள் கும்பாபிஷேகம், ஐயப்ப ஸ்வாமிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் செய்துள்ளனர்.