பதிவு செய்த நாள்
01
ஏப்
2017
01:04
கிருஷ்ணராயபுரம்: மேட்டு மகாதானபுரம் பெரியக்காண்டியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, பக்தர்கள் காவிரியில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்துச் சென்றனர். கிருஷ்ணராயபுரம் தாலுகா, மேட்டு மகாதானபுரம் பெரியக்காண்டியம்மன், தங்காள், முருகன், கன்னிமார், மாசி பெரியண்ணசாமி, மந்திர மகாமுனி, வீரமலையாண்டி, மதுரை வீரன், காத்தவராய சுவாமி ஆகிய சுவாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம், இன்று (ஏப்., 2) காலை, 8:30 மணிக்கு நடக்கிறது. முன்னதாக, நேற்று காலை, மகாதானபுரம் காவிரி ஆற்றில் இருந்து, பக்தர்கள் தீர்த்தக் குடம் எடுத்துக் கொண்டு, கோவில் சென்றடைந்தனர். தொடர்ந்து, சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.