பதிவு செய்த நாள்
01
ஏப்
2017
02:04
குளித்தலை: குளித்தலை காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, இன்று, தீர்த்தக்குடம், பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. குளித்தலை, சேது ரத்தனம் தெருவில் உள்ள காளியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 29ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நேற்றிரவு காவிரியாற்றில் இருந்து அம்மன் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு காட்சியளித்தார். இன்று காலை, 8:00 மணியளவில் கடம்பர்கோவில் காவிரி ஆற்றில் இருந்து பொதுமக்கள், பக்தர்கள் பால்குடம், தீர்த்தக்குடம் எடுத்து வருகின்றனர். தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, திருவிளக்கு பூஜை உள்ளிட்டவை நடக்கிறது. நாளை காலை, 11:00 மணியளவில் சிறப்பு பூஜை, இரவு, 7:30 மணியளவில், அம்மன் திருவீதி உலா, கும்ப பூஜை ஆகியன நடக்கும். பெரியபாலம் பாலன் டீக்கடை அருகில், பத்து அடி உயரத்தில், காளியம்மன் சுவாமி அலங்கரிக்கப்பட்டிருந்ததை, பக்தர்கள் வழிபட்டுச் சென்றனர்.