ஆண்டிபட்டி: டி.சுப்புலாபுரம் தங்க விநாயகர், கந்தநாதன், தண்டாயுதபாணி கோயில் கும்பாபிேஷகம் நாளை நடை பெறுகிறது. டி.சுப்புலாபுரம் கந்தநாதன் கோயிலில் 162 ஆண்டுகளாக கந்த சஷ்டி காப்புக்கட்டு விழாவும், அன்னதானமும் நடந்து வருகிறது. இக்கோயில் திருப்பணிகள் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. இதன் கும்பாபிேஷக விழாவின் முதல்நாளில் பெண்கள் தீர்த்தக்குடங்களுடன் யானை ஊர்வலம் சென்று, பிடிமண் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது.மூன்றாம் நாளான இன்று யாகசாலை பூஜைகள் நடக்கிறது. நாளை காலை 9 மணிமுதல் 10:30 மணிக்குள் மகா கும்பாபிேஷகம் நடைபெறுகிறது.