தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் பங்குனி உத்திர கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஏப் 2017 02:04
தாண்டிக்குடி, தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் பங்குனி உத்திர கொடியேற்றம், கார்த்திகை விழா நடந்தது. விழாவை முன்னிட்டு சுவாமிக்கு அபிஷேக ஆராதனை மற்றும் விளக்குப் பூஜை நடந்தது. தொடர்ந்து பஜன், ஆன்மிக சொற்பொழிவும் நடந்தது. ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த பாலமுருகனை பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின், பங்குனி உத்திர விழா கொடியேற்றம் நடந்தது. காவடிக்குழுவினர், நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர். தமிழகத்தின் பல்வேறு பகுதியில் தீர்த்தங்கள் எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்வர்.