பழநி: பழநி பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு, தீர்த்தக் காவடிகளுடன் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். பழநி பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் இன்று துவங்குகிறது. பக்தர்கள் பாதயாத்திரையாகவும், தீர்த்தக் காவடிகளுடனும் வந்த வண்ணம் உள்ளனர்.ஈரோடு மாவட்டம் கொடுமுடி தீர்த்தக் காவடிக் குழுவினரும் நேற்று பழநியில் குவிந்தனர்.அதிக கூட்டத்தால் ரோப் கார், வின்ச் ஸ்டேஷனில் 2 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் மலைக்கோயில் சென்றனர். ஆக்கிரமிப்பு : ஆக்கிரமிப்பு தள்ளுவண்டி கடைகளால் பாதவிநாயகர் கோயில், சன்னதி வீதி, வடக்கு கிரிவீதியில் நெரிசல் ஏற்படுகிறது. கிரிவீதிகள், அருள்ஜோதி வீதி, அய்யம்புள்ளி ரோடு, குளத்துரோடு, பூங்காரோடு, திருஆவினன்குடி கோயில் அருகே இருபுறங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.