பதிவு செய்த நாள்
03
ஏப்
2017
11:04
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் பங்குனித் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏப்.1ல் இரவு காப்புக்கட்டுதலும், நேற்று காலை 11:௦௦ மணிக்கு கோயில் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் நிறைவடைந்து கொடியேற்றப்பட்டது. இரவு அம்மன் பூதகி வாகனத்தில் வீதிவலம் வந்தார். தினமும் அம்மன் பல்லக்கு, அன்ன, ரிஷப, யானை, சிங்க, கிளி, காமதேனு, குதிரை வாகனத்தில் வலம் வருவார். ஏப். 10ல் காலை 6:00 மணி தொடங்கி மாலை 6:00 வரை அக்னிச்சட்டி ஊர்வலமும், இரவு 8:00 மணிக்கு மேல் அம்மன் சர்வ அலங்காரத்துடன் மின்சார தீப ரதத்தில், நான்கு மாட வீதிகளில் வலம் வருவார். ஏப்.11ல் அதிகாலை 4:00 மணிக்கு அம்மன் கள்ளர் திருக்கோலத்தில், பூப்பல்லக்கில் வைகை ஆற்றில் எழுந்தருளுவார். மார்ச் 12 அதிகாலை 4:00 -பகல் 11:00 மணி வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து பால்குடம் எடுத்து நேர்த் திக்கடன் செலுத்துவர். தொடர்ந்து அபிஷேகம் நடக்கும். அன்று இரவு புஷ்ப பல்லக்கில் அம்மன் சயன திருக்கோலத்தில் வீதிவலம் வருவார். கோயில் முன்புள்ள கலையரங்களில் தினமும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை மீனாட்சி சுந்தரேஸ்வரர், முத்தாலம்மன் கோயில் தேவஸ்தான பரம்பரை டிரஸ்டிகள், ஆயிரவைசிய சபையினர் செய்துவருகின்றனர்.