பதிவு செய்த நாள்
05
ஏப்
2017
12:04
மடத்துக்குளம் : மடத்துக்குளம் அருகே மடத்தூரில் உள்ள பழமையான முக்கண்ணப்பர், உச்சிமாகாளியம்மன் கோவில்களில் நாளை திருக்குட நன்னீராட்டுவிழா நடக்கிறது. பலநு?று ஆண்டுகளாக மக்கள் வழிபட்டு வரும், மடத்தூரில் அமைந்துள்ள முக்கண்ணப்பர் ஆலயம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இக்கோவிலிலும், அருகிலுள்ள உச்சிமாகாளிம்மன் கோவிலிலும் கும்பாபி?ஷக விழா இன்று துவங்குகிறது. உச்சிமாகாளியம்மன் கோவிலில் இன்று மதியம், 2:30 மணிக்கு தீர்த்த குடம், முளைப் பாரி எடுத்து வருதல், 3:00 மணிக்கு பிள்ளையார் வழிபாடு நடக்கிறது. நாளை காலை, 5:30 மணிக்கு திருப்பள்ளியெழுச்சியும், 7:30 மணிக்கு திருக்குடங்கள் புறப்படுதல், 8:00 மணிக்கு உச்சிமாகாளியம்மனுக்கும், 8:15 மணிக்கு மூல மூர்த்திகளுக்கும் கும்பாபி?ஷகம் நடக்கிறது.
முக்கண்ணப்பர் கோவில்: இன்று,மாலை 6:30 மணிக்கு திருவிளக்கு, புனிதநீர், பிள்ளையார் வழிபாட்டுடன் தொடங்குகிறது. நாளை காலை, 8:00 மணிக்கு திருப்பள்ளியெழுச்சியும், மூல மூர்த்திகள் வழிபாடும், 10:00 மணிக்கு திருக்குடங்கள் புறப்படுதலும், 10:15 மணிக்கு மதுரை வீரன், பட்டாளத்து அம்மனுக்கும், 10:45 மணிக்கு முக்கண்ணப்பருக்கும் 11:00 மணிக்கு மூல மூர்த்திகளுக்கு திருக்குட நன்னீராட்டு விழா நடக்கிறது.