புத்தக சாலைகள் பல இருந்தும் மனிதர்கள் ஞானத்தைச் சேகரிக்க முற்படுவதில்லை. நற்பண்புகளும் நல்லறிவுமற்ற குரங்காகவே மனிதன் இருக்கிறான். எனவே ஞானத்தை பெற கடுமையாக முயற்சிக்க வேண்டும். * கடவுளை முழுமையாக நம்புவதன் மூலம் உள்ளத்து ஆசைகளை துறந்துவிட முடியும். இதற்கு முதலில் இறைவனை நாம் முழுமையாக நம்ப வேண்டும். * சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருந்து கொண்டேயிருந்தாலும் பொருளுள்ள பலர், இல்லாதவர்களுக்கு தந்து உதவலாம் என்ற கருணை உள்ளம் கொண்டுள்ளனர். ஆனால், இந்தக் கருணை அல்லது தயை மட்டுமே ஏழ்மையை நிரந்தரமாக நீக்கி விடாது. எல்லாரிடமும் பொருள் இருக்க வேண்டும். அதுவே ஏழ்மையை நிரந்தரமாக நீக்கும். எல்லாரும் எல்லாமும் பெற்றால் இல்லாமை என்பது நீங்கி விடும். * மனிதர்களுக்குள் சமத்துவம் மிகவும் அவசியம். ஆனால், அன்பில்லாத சமத்துவத்தால் பகை தான் மிஞ்சும். இந்த நிலையை மாற்ற வேண்டும். * சோம்பலை அகற்றுவதற்கு உடலுழைப்பு வேண்டும். அதை வெல்வதற்கு இது ஒன்றே வழி. உடலுழைப்புக்காக செலவழிக்கப்படும் நேரம் வீணாவதில்லை. அது நமக்கு நல்ல ஆரோக்கியத்தைக் கொடுப்பதுடன், அறிவையும் கூர்மையாகித் தூய்மையடையச் செய்கிறது. * நம் உடலில் சோம்பல் புகாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சோம்பலினால் மனமும், அறிவும் மங்கிவிடுகிறது. இதனால் பல துன்பங்கள் உண்டாகிறது. * பயன் கருதாது செய்யும் பணிக்கு அற்புதமான சக்தி இருப்பதால், அனைவரும் இதனை கடைப்பிடிக்கலாம். * மக்கள் அனை வருமே நாராயணர்கள் என்று எண்ணுவதே நிஜமான ஆன்மிகம்.