ஹேவிளம்பி ஆண்டின் தொடக்கத்தில் குரு 6-ம் இடமான கன்னி ராசியில் வக்ரமாக உள்ளார். செப்.1ல் 7-ம் இடமான துலாம் ராசிக்கு மாறும் குரு பிப்.13 வரை அங்கு இருப்பார். அதன் பிறகு 8-ம் இடமான விருச்சிக ராசிக்கு செல்கிறார். ராகு 5-ம் இடமான சிம்மத்தில் இருந்து ஜூலை 26ல் கடகத்திற்கு மாறுகிறார். கேது 11-ம் இடமான கும்பத்தில் இருந்து ஜூலை 26ல் 10-ம் இடமான மகரத்திற்கு செல்கிறார். சனி ராசிக்கு 8ல் இருக்கிறார். அவர் டிச.18ல் விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு செல்கிறார். மேற்கண்ட நிலையில் இருந்து விரிவான பலனை காணலாம்.
ஏப்ரல் 14 – ஜூலை 31
குருவின் பார்வையால் வருமானம் உயரும். கணவன், -மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். சுப நிகழ்ச்சிகள் விடாமுயற்சியால் கைகூடும். வீடு, மனை வாங்கும் எண்ணம் தடைபடலாம். பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத வகையில் இடமாற்றம் ஏற்படலாம். வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். கலைஞர்களுக்கு விருது, பாராட்டு போன்றவை கைநழுவிப் போகலாம். அரசியல்வாதிகள் பலன் எதிர்பார்க்காமல் உழைக்க நேரிடும். மாணவர்களுக்கு முயற்சிக்கேற்ற வளர்ச்சி உண்டாகும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் ஏற்படும். விவசாயிகளுக்கு மானாவாரி பயிர் மூலம் மகசூல் அதிகரிக்கும். பெண்கள் ஆடம்பர செலவை தவிர்க்கவும்.
ஆகஸ்ட்1 – 2018 ஜனவரி 31
குருவால் குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். வியாபாரிகள் தொழிலில் நல்ல முன்னேற்றம் காண்பர். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்கும். மாணவர்கள் கல்வி வளர்ச்சி காண்பர். போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுவர். விவசாயிகள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். அதற்கு ஏற்ப வருமானம் கிடைக்கும். பெண்கள் உற்சாகமாக காணப்படுவர்.
2018- பிப்ரவரி 1 – ஏப்ரல் 13
மதிப்பு, மரியாதை சீராக இருக்கும். திருமணம் போன்ற சுபவிஷயம் தள்ளிப் போகலாம். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். வியாபாரிகள் சீரான வளர்ச்சி காண்பர். குருவின் 5-ம் பார்வையால் வருமானத்திற்கு குறைவிருக்காது. கலைஞர்கள் எதிர்பார்த்த ஒப்பந்தம் பெறுவதில் தாமதமாகும். அரசியல்வாதிகள் ஓரளவு வளர்ச்சி காண்பர். மாணவர்களுக்கு விடாமுயற்சி தேவை. விவசாயிகளுக்கு மிதமான வருமானம் கிடைக்கும். பெண்கள் குடும்பத்தாரின் அன்பை பெறுவர்.
பரிகாரம்: ராகு, கேதுவுக்கு அர்ச்சனை. சனீஸ்வரருக்கு எள் தீபம். செல்ல வேண்டிய கோவில் திருச்செந்துார் முருகன்.
மேலும்
தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2025 முதல் 13.4.2026 வரை) »