பதிவு செய்த நாள்
07
ஏப்
2017
02:04
காக்களூர்: காக்களூர், திரிபுர சுந்தரி அம்பாள் உடனுறை பாதாள லிங்கேஸ்வரர் கோவிலில், வரும் 9ம் தேதி, கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. திருப்பணிகள் திருவள்ளூர் அடுத்த, காக்களூர், மின்வாரிய குடியிருப்பு உட்புறத்தில் அமைந்துள்ளது திரிபுரசுந்தரி அம்பாள் உடனுறை பாதாளலிங்கேஸ்வரர் கோவில். வீரஆஞ்சநேயர் கோவிலுக்கு அருகில், இக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 2015ல் பாலாலயம் செய்யப்பட்டு, விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத முருக பெருமான், திரிபுரசுந்தரி அம்பாள், பைரவர் மற்றும் நவகிரகங்களுக்கு நூதனமாக சன்னிதிகள், தனித்தனியே அமைக்கப்பட்டுள்ளன. திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், மகா கும்பாபிஷேகம், வரும் 9ம் தேதி நடக்கிறது. இதற்காக, வரும் 7ம் தேதி, மாலை 5:00 மணிக்கு முதற்கால யாக பூஜையும், மறுநாள் 8ம் தேதி, காலை, 8:30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும் நடைபெறும். அன்று மாலை, மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடைபெறும்.
திருக்கல்யாணம்: வரும் 9ம் தேதி, காலை, 7:00 மணிக்கு, யாத்ரா தானம், கடம் புறப்பாடும், காலை 9:00 மணிக்கு மேல், திரிபுரசுந்தரி சமேத பாதாள லிங்கேஸ்வரர் மற்றும் அனைத்து விமானங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.அதன் பின், மகாபிஷேகம் திவ்ய அலங்காரம் மகா தீபாராதனையும், மதியம் 11:00 மணிக்கு, திரிபுரசுந்தரி சமேத பாதாளலிங்கேஸ்வரர் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறும்.