அந்தியூர்: அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா, கடந்த, 5ல் நடந்தது. இதையடுத்து, நேற்று தேரோட்டம் நடந்தது. அதிகாலை, 5:00 மணிக்கு, பத்ரகாளியம்மன் உற்சவர் சிலை, மேள தாளங்கள் முழங்க, தேர்வீதியில் நிறுத்தப்பட்டிருந்த தேருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. தேரில் எழுந்தருளிய சுவாமிக்கு, சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தன. மலை, 6:00 மணியளவில், முகமைதாரர்கள் மற்றும் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அந்தியூர் சுற்றுவட்டார மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.