பதிவு செய்த நாள்
08
ஏப்
2017
01:04
சேலம்: கோட்டை அழகிரிநாதர் கோவிலில், சிறப்பு பூஜை நடந்தது. சேலம், கோட்டை, அழகிரிநாதர் கோவிலில், ராமநவமி விழா முன்னிட்டு, நேற்று அதிகாலை முதல் இரவு, 9:00 மணி வரை, சிறப்பு பூஜை நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். வரும், 14, 15ல், மூலவர் பெருமாள், தாயார், ஆஞ்சநேயர், உற்சவர் ராமர் ஆகியோருக்கு, முத்தங்கி அலங்காரம் சாத்துபடி செய்யப்படும். 15 அன்று காலை, 10:30 மணிக்கு ஆஞ்சநேயருக்கு அபிஷேக ஆராதனை, வடமாலை, வெள்ளிக்கவச அலங்காரம், மாலை, 6:00 மணிக்கு சிறப்பு பஜனை நடக்கிறது. தொடர்ந்து, கருட வாகனத்தில் சுந்தரராஜ பெருமாள் திருவீதி உலா நடைபெறும்.