பதிவு செய்த நாள்
08
ஏப்
2017
01:04
கரூர்: கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், பங்குனி தேர்த்திருவிழாவை முன்னிட்டு, கடந்த, 1ல் கொடியேற்ற விழா நடந்தது. நாள்தோறும், உற்சவ மூர்த்திகள் திருவீதி உலா வந்து,
பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்நிலையில், நேற்று காலை, கோவில் சுற்றுப்பிரகார மண்டபத்தில், அலங்காரவல்லி சமேத சவுந்தரநாயகி உடனுறை கல்யாண பசுபதீஸ்வருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. பல்வேறு மலர்களால் அலங்கரித்து, ஹோமங்கள் நடத்தி பெண் வீட்டார் சீர்வரிசை பொருட்களை எடுத்து வந்தனர். பின், சுவாமிகளுக்கு மாலை
மாற்றப்பட்டு, அலங்காரவல்லி சமேத சவுந்தரநாயகி உடனுறை கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. பெண் பக்தர்களுக்கு மஞ்சள் கயிறுகள் வழங்கப்பட்டன. நாளை (ஏப்., 9) தேர்த்திருவிழா கோலாகலமாக நடக்கவுள்ளது.