கள்ளிக்குடி:கள்ளிக்குடி அருகே சிவரக்கோட்டையில் 1600 ஆண்டுகளுக்கு முன் பாண்டிய மன்னர் காலத்தில் மாரியம்மன் கோயில், மலையூரணி பெருமாள் கோயில், கோட்டை விநாயகர் கோயில், வடக்கு வாசல் செல்லியம்மன் கோயில் ஆகிய கோயில்கள் ஒரே நேரத்தில் கட்டப்பட்டன.தற்போது இவை பராமரிப்பன்றி உள்ளன. மாரியம்மன் கோயிலை கிராம மக்கள் பராமரித்து திருவிழா கொண்டாடி வருகின்றனர். மற்ற கோயில்கள் பெயரளவில் பராமரிக்கின்றனர். இக்கோயில்களில் சில சிலைகள் கூட இல்லை. இக்கிராம கோயில்களை முறைப்படி பராமரித்து, மக்களின் வழிபாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.