தெட்சணமுத்து மாரியம்மன் கோவிலில் முளைப்பாலிகை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஏப் 2017 03:04
காரைக்கால்: காரைக்கால் தெட்சணமுத்து மாரியம்மன் கோவிலில் முளைப்பாலிகை விழா நடந்தது. காரைக்கால் தலத்தெரு தெட்சணமுத்து மாரியம்மன், நடனகாளியம்மன், பத்திரகாளியம்மன் படைபத்திர காளியம்மன் கோவில் முளைப்பாலி திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.2ம் தேதி சிறுவர் காவடி,ஊர்க்காவடி,4ம் தேதி திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது.நேற்று முன்தினம் இரவு தெட்சணமுத்து மாரியம்மன், நடனகாளியம்மன், பத்திரகாளியம்மன், படைபத்திரகாளியம்மன் முனைப்பாலிகையுடன் முக்கியவீதிகள் பாரதியார் சாலை வழியாக அரலாற்றில் எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.இதில் ஏராளமான பெண்கள் முளைப்பாலிகையுடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இன்று தெட்சணமுத்து மாரியம்மனுக்கு நடன காளியம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.