பதிவு செய்த நாள்
10
ஏப்
2017
03:04
கோவை சனிப்பிரதோஷ நாளில், பிரதோஷ தாண்டவத்தை அரங்கேற்றும் அரிய நிகழ்ச்சியை, கடந்த 16 ஆண்டுகளாக நிறைவேற்றிவருகிறார் உடுமலையை சேர்ந்த செந்தில்.ஆனந்த தாண்டவம் துவங்கி, பிரளய தாண்டவம் வரை, சிவபெருமான், 108 தாண்டவங்களை ஆடியதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. இதில், பஞ்ச தாண்டவங்கள், சப்த தாண்டவங்கள் என, பல பிரிவுகள் இருந்தாலும், மொத்தமாக சிவ தாண்டவம் என்றே அழைக்கப்படுகிறது. தேவ-அசுரர்கள் பாற்கடல் கடைந்த கதையும், அதிலிருந்து தோன்றிய விஷத்தை அருந்தி
தன் கண்டத்தில் தக்கவைத்துக் கொண்டு, திருநீலகண்டராக சிவபெருமான் மாறினார். இதில், உடுமலையை சேர்ந்த செந்தில், 200க்கும் மேற்பட்ட கோவில்களில், பிரதோஷ தாண்டவம் ஆடியுள்ளார். நேற்று முன்தினம், கோவை வடவள்ளி நவாவூர் பிரிவில் உள்ள புவனேஸ்வரி அம்மன் கோவிலில் அவர் ஆடிய பிரதோஷ தாண்டவம், பக்தர்களை சிலிர்க்க செய்தது.