ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஏப் 2017 05:04
திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடந்து வரும் பங்குனி உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேராட்டம் சித்திரை வீதிகளில் கோலாகலமாக நடந்தது.
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆதிபிரம்மோற்சவம் எனப்படும் பங்குனி தேர் திருவிழா கொடியோற்றம், கடந்த, 1ம் தேதி நடந்தது. இதைத்தொடர்ந்து நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தார். பங்குனி உத்திரத்தன்று தாயார்-நம்பெருமாள் சேர்த்தி வைபவம் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் இன்று (ஏப்.10ல்) காலை நடந்தது. காலை நம்பெருமாள் தாயார் சன்னதியிலிருந்து புறப்பட்டு, ரதரோஹணம், ரத யாத்திரை நடந்தது. பின் நம்பெருமாள் பங்குனி தேரில் எழுந்தருளினார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு சித்திரை வீதிகளில் தேர் வலம் வந்து, மதியம் நிலையை அடைந்தது. இத்திருவிழாவை காண வெளியூரிலிருந்து ஏராளமான பக்தர்கள் ஸ்ரீரங்கத்தில் குவித்தனர்.