Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேலில் சொருகிய எலுமிச்சை ரூ.27 ... பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் கொடியிறக்கம் பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று முதல் குடிக்க மாட்டேன்... : காப்பு கட்டி குடிமகன்கள் சத்தியம்
எழுத்தின் அளவு:
இன்று முதல் குடிக்க மாட்டேன்... : காப்பு கட்டி குடிமகன்கள் சத்தியம்

பதிவு செய்த நாள்

12 ஏப்
2017
11:04

ஆத்துார்: போதை பழக்கத்தில் இருந்து மீள, ஆத்துார், மதுரகாளியம்மன் கோவிலில், இனிமேல் குடிக்க மாட்டேன் என, குடிமகன்கள் சத்தியம் செய்து, காப்பு கட்டி செல்கின்றனர். சேலம் மாவட்டம், ஆத்துார், வசிஷ்ட நதி வடக்கு பகுதியில் உள்ள சம்போடை வனத்தில், மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, ஆத்துார் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து, ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சமீப காலமாக, மது பழக்கத்துக்கு அடிமையான பலர், மதுரகாளியம்மனிடம் சத்தியம் செய்து, அம்மன் மடியில் வைக்கப்பட்ட எலுமிச்சம் பழத்தை சாப்பிட்டு, கையில் கயிறு கட்டி செல்கின்றனர். மதுரகாளியம்மனிடம் சத்தியம் செய்ய வரும், குடிமகன்களிடம், இனிமேல் குடிக்க மாட்டேன் என, கற்பூரத்தை அணைத்து, சத்தியம் வாங்கும் கோவில் பூசாரி, அவர்களுக்கு கையில், சிவப்பு நிற கயிறு கட்டி விடுகிறார்.

பூசாரி ராஜாமணி கூறியதாவது: மதுரகாளியம்மனிடம் சத்தியம் செய்து செல்லும், குடிமகன்கள், மது குடிப்பதை நிறுத்தி விடுகின்றனர். சிலர் கையில் உள்ள கயிற்றை அவிழ்த்து விட்டு, மீண்டும் குடிக்கின்றனர். அவர்கள், பல்வேறு துன்பங்களை அனுபவிக்கின்றனர். பல பெண்கள், கணவர், மகன்களை, ஆத்துாருக்கு அழைத்து வந்து, மதுரகாளியம்மன் கோவிலில், சத்தியம் வாங்கிச் செல்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில், ஒன்பது நாள் பிரம்மோத்சவ ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்,பிப்.8- ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் தொகுதி செயற்குழு ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: எஸ்.குளத்துார் சரவணபுரத்தில் 81 அடி உயர ஆறுமுக பெருமான் கோவில் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் 4 ஆண்டுக்கு பின் ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றியதால் பளிச் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar