பதிவு செய்த நாள்
05
நவ
2011
11:11
கரூர்: காவிரியின் புனிதம் காக்க மக்களிடம் விழிப்புணர்வு கூட்ட, அகில பாரத துறவியர் குழுவினர் இன்று (5 ம் தேதி) கரூருக்கு வருகின்றனர்.கர்நாடகா மற்றும் தமிழகத்தின் குடிநீர் மற்றும் விவசாய பணிகளின் ஜீவநாடியாக உள்ள காவிரியாற்றின் புனிதம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர் வு ஏற்படுத்த அகில பாரத துறவியர் குழுவினர் கடந்த கடந்த 23ம் தேதி கர்நாடகாவில் காவிரியாறு தொடங்கும் இடத்தில் இ ருந்து யாத்திரையை தொடங்கியுள்ளனர். இக்குழுவினர் இன்று (5ம்தேதி) கரூர் வருகின்றனர். அவர்களுக்கு கரூர் பசுபதீஸ்வரர் கோவில் அருகே ஐயப்பா சேவா சங்க மண்டபத்தில் இன்று காலை 9.30 மணிக்கு கரூர் ஆன்மீக, இலக்கிய, தமிழ், பொதுநல அமைப்புகள் சார்பில் யாத்திரை குழுவினருகு வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து கருத்தரங்கம், மாலை 3 மணிக்கு விழிப்புணர்வு ஊர்வலம், மாலை 5.30 மணிக்கு நெரூரில் காவிரியாற்றுக்கு ஆரத்தி எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. அதில் சுவாமி போதானந்தா, ஸ்ரீமத் நித்யசத்வானந்தா, யோகினி ஸ்ரீ வித்யாம்பா சரஸ்வதி உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட துறவியர் கரூரில் காவிரியாற்றின் புனிதம் குறித்து பேசுகின்றனர். நிகழ்ச்சியில் வாசவி மஹிலா மண்டலி, ஐயப்ப சேவா சங்கம், வள்ளலார் அமைப்புகள், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்றம், திருக்குறள் பேரவை உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் மீனாட்சி கருணாகரன், சக்தி முருகானந்தம், சக்தி ஜெயச்சந்திரன், வள்ளலார் ராமகிருஷ்ணன், புளியம்பட்டி ராமசாமி, வக்கீல் குணசேகரன், சிவசங்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்."விழிப்புணர்வு யாத்திரையில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அதிகளவில் பங்கேற்கலாம் என விழா ஒருங்கிணைப்புக்குழு சார்பில் ராமச்சந்திரன், வலம்புரிசோமு, மேலை பழனியப்பன், நாகராசன் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.