செய்துங்கநல்லூர்: விட்டிலாபுரம் பா ண்டு ரெங்கன் கோயிலில் பாதயாத்திரைக் குழுவினர் சிறப்பு பஜனை நடப்பதால் பக்தர்கள் ஏராளமாக கல ந்து கொள்ள கோயில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள் ளது.நெல்லை மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த விஸ்வ வாரஹரி சமஸ்தானம் சார்பில் விட்டிலாபுரம் வரை ஒரு பாதயாத்திரை ஏற்பாடு செய்துள்ளது. அந் த யாத்திரை சுமார் 120கி.மீ தூரம் வந்து விட்டிலாபுரத்தை அடைகிறது. வரும் ஞாயிறு மற்றும் திங்கட் கிழமைகளில் இந்த யாத்திரை பக்தர்கள் விட்டிலாபுரம் பாண்டுரெங்கன் கோயிலில் சிறப்பு பஜனை நடத்துகின்றனர். தட்சண பண்டரிபுரமான விட்டிலாபுரத்தில் நடக்கும் சிறப்பு பஜ னை பாடல்களை கேட்டு அருள் பெற கோயில் நிர்வாகம் பக்தர்களை அழைக்கிறது. மேலும் ஞாயிற்றுகிழமை வந்து சேரும் பாதயாத்திரை குழுவினர்களை வரவேற்க கோயில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது. அனைத்து பாண்டுரெங்கன் பக்தர்கள் தவறாது கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.