Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இக்ஷவாகு வம்சத்தில் ராமர் ... தமிழ்ப்புத்தாண்டில் பூஜை அறைகளில் வைக்கப்பட வேண்டிய கனிகள்! தமிழ்ப்புத்தாண்டில் பூஜை அறைகளில் ...
முதல் பக்கம் » துளிகள்
தமிழ்ப்புத்தாண்டு அன்று என்ன செய்ய வேண்டும்?
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தமிழ்ப்புத்தாண்டு அன்று என்ன செய்ய வேண்டும்?

பதிவு செய்த நாள்

12 ஏப்
2017
06:04

தமிழ்ப்புத்தாண்டு சித்திரை மாதம் (ஏப்ரல் 14) முதல் தேதி மிகவும் சிறப்பான நாள். அன்றைய தினத்தில் அதிகாலை எழுந்து குளித்து புதிய ஆடைகளை அணிந்து கோயில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வர். எல்லா கோயில்களிலும் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெறும். சகல நற்காரியங்களையும், செய்வதற்கேற்ற காலம் இது. தமிழ் வருடப்பிறப்பான சித்திரை மாதம் முதல் நாளை கேரள மக்கள் கொன்னம்பூ வைத்து பூஜிக்கின்றனர்.

கேரளாவில் சித்திரை விஷுவன்று கனி காண்பது மரபு. பங்குனி கடைசி நாள் அன்று இரவு பூஜை அறையில் சுவாமி படங்களுக்கு பூச்சூடுவர். கோலமிட்ட மனைப்பலகையில் முகம் பார்க்கும் கண்ணாடி வைத்து இருபுறமும் குத்துவிளக்கு வைப்பார்கள். ஒரு தாம்பளத்தில் பூ, பழம், வெற்றிலைபாக்கும், இன்னொன்றில் கிண்ணங்களில் அரிசிபருப்பு, தங்க, வெள்ளிக் காசுகள், ஆபரணங்களும் வைப்பர். இன்னொரு தாம்பளத்தில் முக்கனிகளை வைப்பர். செவ்வாழை, நேந்திரம் வாழை, பலாப்பழம், கொன்றைப் பூச்சரம், தென்னம் பூ கொத்தும் வைக்கப்படும். மறுநாள் அதிகாலை வீட்டின் மூத்தவர் எழுந்து பூஜை அறைக்கு வந்து குத்துவிளக்கேற்றுவார். சுவாமியை வணங்கியபின் வீட்டில் உள்ளவர்களை வயதுப்படி கண்மூடிவரச் செய்து பூஜை அறையில் கண்திறந்து காண வைப்பதுதான் விஷூக்கனி காணல். பின் எல்லாருக்கும் காசு தருவார். இதை கை நீட்டம் என்பர். பின், அவரிடம் ஆசி பெறுவர். நீராடியபின் புத்தாடை அணிந்து கோயிலுக்குச் சென்று வழிபட்டு வந்தபின் அறுசுவை உணவு உண்பர்.

குருவாயூர் கோயிலுக்கு முதல் நாள் இரவே சென்று காத்திருந்து அதிகாலை நடைதிறந்ததும் குருவாயூரப்பனைத் தரிசிப்பார்கள். ஆலயத்தில் கை நீட்டப் பணம் தருவதை ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசமின்றி வாங்கிச் செல்வர்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* நல்லவர்களின் நட்பு மகிழ்ச்சியையும், கெட்டவரின் நட்பு துன்பத்தையும் தரும்.    * புத்தகத்தால் வரும் ... மேலும்
 
temple news
* பொறுமையே வெற்றிக்கு அடிப்படை. இதை உணர்ந்து செயல்படு.  * ஒவ்வொருவரிடமும் தெய்வீக சக்தி உள்ளது. அதை ... மேலும்
 
temple news
* எப்போதும் அமைதியாக இருப்பதே உண்மையான வலிமை.  * எந்த செயலில் ஈடுபட்டாலும் கடவுளை நினைவில் கொள். * ... மேலும்
 
temple news
* கடவுளை அடைய பிரம்மச்சரியத்தைக் கடைபிடி. * தீய சிந்தனை இருக்கும்வரை பக்தி உண்டாகாது. * கடவுளிடம் பக்தி ... மேலும்
 
temple news
* தவறான செயலை செய்துவிட்டு அதற்கு பரிகாரம் தேடாதே. நல்லவனாக இருப்பதே எப்போதும் சிறந்தது.  * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar