திருத்தங்கல் மாரியம்மன் தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஏப் 2017 06:04
சிவகாசி: திருத்தங்கல் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இக்கோயில் பங்குனி பொங்கல் விழாவையொட்டி அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், தீபராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து மண்டகபடிகளில் எழுந்தருளி பக்த ர்களுக்கு அருள்பாலித்தார்.
பொங்கல் , அக்னி சட்டி கயிறு குத்து, ஆயிரம் கண்பானை, முளைபாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பெண்களும் ஆர்வம் இதை தொடர்ந்து தேர் திருவிழா நடந்தது. காலை 10:30 மணிக்குஅம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருள ஏராளமான பக்தர்களை தேர் வடம் பிடித்து இழுத்து சென்றனர். பெண்களும் ஆர்வமாக திரண்டு வடம் பிடித்து இழுத்தனர். ரதவீதிகளில் உலா வந்த தேர் நிலைக்கு திரும்பியது. ஏற்பாடுகளை தலைவர் பாலகுரு, செயலாளர் கருப்பசாமி, பொருளாளர் அர்ச்சுனன், துணை தலைவர் சுப்பிரமணியன், உதவி தலைவர் ராஜாராம், உதவிச் செயலாளர் பிச்சைக்கனி மற்றும் நிர்வாக குழு உறுப்பினர் செய்தனர்.