பதிவு செய்த நாள்
15
ஏப்
2017
01:04
ஊத்துக்கோட்டை : பள்ளிகொண்டீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள தாம்பத்ய தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. ஊத்துக்கோட்டை அடுத்த, சுருட்டப்பள்ளி கிராமத்தில் உள்ளது, சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவில். இங்கு
சிவபெருமான் உருவ ரூபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பழமை வாய்ந்த இக்கோவில் வளாகத்தில், தாம்பத்ய தட்சிணாமூர்த்தி சன்னிதி உள்ளது. இங்கு சுவாமி, தன் மனைவி கவுரியை அணைத்தபடி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
சுவாமிக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தன. தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. முன்னதாக, பக்தர்கள் கொண்டை கடலையை மாலையாக சுவாமிக்கு அணிவித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். இதேபோல், தாராட்சி, பரதீஸ்வரர் கோவில், வடதில்லை பாபஹரேஸ்வரர் கோவில் உள்ளிட்ட பழமை
வாய்ந்த கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடந்தன.