திருநெல்வேலி குற்றாலத்தில் அருள்பாலிக்கிறார் குற்றாலநாதர். அருவியின் சாரலாலும் பேரிரைச்சாலும் உண்டாகும் தலைவலி நீங்குவதற்காக, இங்குள்ள இறைவனுக்கு குடிநீ சமர்ப்பிக்கிறார்கள்(குடிநீ- கஷாயம்). 48 வகை மூலிகைகள், பால், சந்தனம் கலந்த தைல அபிஷேகமும் உண்டு. இதையொட்டி, குற்றால நாதருக்கு வற்றாத குடிநீயும் மாளாத தலைவலியும் எனும் சொல்வழக்கு நெல்லைப் பகுதியில் பிரசித்தம்!