ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கொசப்பாளையம் பகுதியில், நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த தர்மராஜா கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று கோவில் நிர்வாகத்தின் சார்பில், உலக நன்மை வேண்டியும், மழை வேண்டியும், அக்னி வசந்த உற்சவ விழா நடந்தது. இதை முன்னிட்டு, தர்மராஜா சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, யாகசாலை அமைத்து சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதில், அப்பகுதியை சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.