பதிவு செய்த நாள்
20
ஏப்
2017
01:04
மொடக்குறிச்சி: ராட்டை சுற்றிபாளையத்தில், மழைவேண்டி அப்பகுதி மக்கள், வேட்டைக்கார சுவாமிக்கு புளிசாதம் சமைத்து வழிபாடு செய்தனர். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டாரத்தில், பெரும்பாலான இடங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. கடும் வறட்சியால், கால்நடைகளுக்கு தீவனம் கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். இந்நிலையில், அவல்பூந்துறை அருகேயுள்ள ராட்டை சுற்றிபாளையத்தில் இருக்கும், வேட்டைக்கார சுவாமிக்கு, அப்பகுதி மக்கள் நேற்று புனுகு, சந்தனம் சாற்றி, புளிசாதம் படைத்து வழிபாட்டில் ஈடுபட்டனர். பின்னர், சாதத்தை எடுத்துக்கொண்டு ஓட, அவர்களை துரத்தி பிடித்து சாதத்தை பிடுங்கி, அனைவரும் பங்கிட்டு சாப்பிட்டனர். இதுபோல், வேட்டைக்கார சுவாமிக்கு வழிபாடு செய்தால், மழை வரும் என்பது ஐதீகம் என, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.