பதிவு செய்த நாள்
20
ஏப்
2017
01:04
ஓசூர்: ஓசூரில் உள்ள பண்டாஞ்சநேயர் கோவில் உண்டியல் திறக்கப்பட்டது. இதில், இரண்டு லட்சத்து, 54 ஆயிரத்து, 636 ரூபாய் காணிக்கை இருந்தது. ஓசூர் - ராயக்கோட்டை பிரிவு சாலையில், பண்டாஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவில் அறக்கட்டளை ஒப்புதலின் படி, இந்து அறநிலையத்துறை வசம் இந்த மாதம் கோவில் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்த, கடந்த, ஆறு மாதமாக எண்ணப்படாமல் இருந்த உண்டியல் திறக்கப்பட்டு, நேற்று காலை எண்ணப்பட்டது. இதில், ஒரு லட்சத்து, 27 ஆயிரத்து, 636 ரூபாய் புதிய ரூபாய் நோட்டுகளும், ஒரு லட்சத்து, 27 ஆயிரம் ரூபாய் பழைய நோட்டுகளும் என, மொத்தம், இரண்டு லட்சத்து, 54 ஆயிரத்து, 636 ரூபாய் இருந்தது. பழைய ரூபாய் நோட்டுகள், அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.