பதிவு செய்த நாள்
24
ஏப்
2017
12:04
காஞ்சிபுரம்;காஞ்சிபுரம், வரதராஜப்பெருமாள் கோவிலிலுக்கு வரும் பக்தர்களின் பாதங்களை, வெயிலின் தாக்கத்தில்இருந்து காக்க, தரைவிரிப்பு போடப்பட்டு உள்ளது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களின் ஒன்று. 22 ஏக்கர் பரப்புள்ள இக்கோவிலின், இரு ராஜகோபுரங்களும், சிறிய சோழனால், கி.பி., 1018 - 1054ல் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல இடங்களில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.தற்போது, காஞ்சிபுரத்தில் நிலவும் வெயில் காரணமாக, கோவில் பிரகாரத்தில் உள்ள கல் தரையில், சூரியனின் வெப்பம், நடந்து செல்லும் பக்தர்களின் பாதங்களை, பதம் பார்த்து விடுகிறது. இதனால், பக்தர்கள் பெரும் அவதிப்பட்டனர். பக்தர்களின் வசதிக்காக, கோவில் நிர்வாகம் சார்பில், தரைவிரிப்பு (மேட்) அமைக்கப் பட்டுள்ளது. மேலும், பங்குனி உத்திர திருவிழா மற்றும் உடையவர் சாற்றுமறை உற்சவத்திற்காக நிழல் தரும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதங்களுக்கு இதமாக இருப்பதோடு, பந்தலில் அமர்ந்து ஓய்வெடுத்த பின் செல்கின்றனர்.