புனித செல்வநாயகி ஆலய திருவிழா: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஏப் 2017 12:04
இடைப்பாடி: சேலம் மறைமாவட்டம், இடைப்பாடி பங்கு புனித செல்வநாயகி ஆலய தேர்த்திருவிழா நடந்து வருகிறது. ஆர்சி கத்தோலிக்க கிறிஸ்தவர்களால், நடத்தும் திருவிழா பெரம்பலூர் மாவட்டம் ஏலாங்குறிச்சி, புதுச்சேரி கோனங்குப்பம் ஆலய திருவிழாவிற்கு அடுத்து, இடைப்பாடி வெள்ளாண்டிவலசையில் நடைபெறும் விழாதான் கத்தோலிக்க கிறிஸ்தவர்களிடையே சிறப்பு பெற்றது. நேற்று முன்தினம் இரவு, உலக மீட்பர் என்ற ஒளி, ஒலி நாடகம் நடந்தது. அதேபோல் நேற்று அதிகாலை, புனிதசெல்வநாயகி ஆலயத்தின் தேர்த்திருவிழா வெள்ளாண்டிவலசு பகுதியை சுற்றியுள்ள தெருக்களில் வலம் வந்தது. சேலம் மறைமாவட்ட ஆயர் சிங்கராயன், இடைப்பாடி பங்குத்தந்தை பீட்டர்ஜான்பால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.