பதிவு செய்த நாள்
02
மே
2017
02:05
தர்மபுரி: தர்மபுரி குப்பா கவுண்டர் தெருவில் உள்ள பூவாடைக்காரி காவேரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று காலை, 10:00 மணிக்கு நடந்தது. இதையொட்டி, நேற்று காலை சிறப்பு யாக பூஜை நடந்தது. தொடர்ந்து, சிவாச்சாரியார்கள், கோபுரத்துக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
* வேலூர் மாவட்டம், ஆற்காடு அடுத்த கீழ்மின்னல் கிராமத்தில், 100 ஆண்டுகள் பழமையான ரேணுகாம்பாள் கோவில், சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில், சீதாராம பஜனை கோவில்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமி தலைமையில், விளாப்பாக்கம் சபாரத்தின சிவாச்சாரியார் கும்பாபிஷேகம் செய்து
வைத்தார். வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடம் முரளிதர சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள், பாலமதி ராமகிருஷ்ண சாது சுவாமிகள், வேலூர் சங்கரர் குருஜி, மகாதேவமலை மகானந்த சித்தர் சுவாமிகள், திருவலம் சாந்தா சுவாமிகள், ஓச்சேரி மோகனானந்த சுவாமிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.