பதிவு செய்த நாள்
03
மே
2017
11:05
மாமல்லபுரம்: திருக்கழுக்குன்றம் பிரம்மோற்சவ விழாவில், சைவ சமய குரவர்கள், 63 நாயன்மார் சுவாமிகள், நேற்று கோலாகலமாக மலைவலம் சென்றனர்.திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், கடந்த, 30ம் தேதி, சித்திரை பிரம்மோற்சவ விழா துவங்கி, தொடர்ந்து நடைபெறுகிறது.
வாகன புறப்பாடு: சைவ சமய குரவர்கள் அறுபத்து மூன்று நாயன்மார் சுவாமிகள், மலைவலம் சென்ற மூன்றாம் நாள் உற்சவம், நேற்று, கோலாகலமாக நடைபெற்றது.பக்தவச்சலேஸ்வரர் கோவிலில், நேற்று காலை நடந்த சிறப்பு வழிபாடு, தீபாராதனையைத் தொடர்ந்து, 6:30 மணிக்கு, நாயன்மார் சுவாமிகள், கோவிலிலிருந்து மலைவலத்திற்கு புறப்பட்டனர். அவர்களை தொடர்ந்து, வேதகிரீஸ்வரர், வெள்ளி அதிகார நந்தியிலும், திரிபுரசுந்தரி அம்மன், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர், அவரவர் வாகனத்திலும் சென்றனர்.
பிரசாதம்: வேதகிரீஸ்வரர் கோவில் அமைந்த மலைக்குன்றைச் சுற்றி, அவர்கள் வலம் வர, திருக்கழுக்குன்றம் மற்றும் சுற்றுப்புற பக்தர்கள் வழிபட்டனர். அவர்களுக்கு, நீர், மோர், பிரசாதம் வழங்கப்பட்டது. கோவிலுக்கு வாடகை பாக்கி வைத்துள்ளவர்களுக்கு முறைப்படி, நோட்டீஸ் அனுப்பியும், நிலுவைத் தொகையை செலுத்தவில்லை. இதனால், இந்து சமய அறநிலையத் துறை உயர் அதிகாரிகள் உத்தரவுப்படி, பாக்கி வைத்துள்ளவர்களின் பெயர்கள் அடங்கிய விளம்பர பதாகை வைக்கப்பட்டுள்ளது. கால அவகாசத்திற்குள் செலுத்தாதவர்களை வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும்.அலுவலர்இந்து சமய அறநிலையத் துறை, காஞ்சிபுரம்