குடியாத்தம்: வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பள்ளிகொண்டாவில் மிகவும் பழமை வாய்ந்த உத்தர ரங்கநாத சாமி கோவில் உள்ளது. இங்கு சித்திரை மாதம் பிரம்மோற்வசத்தை முன்னிட்டு, நேற்று தேர் திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு, ரங்கநாயகி உடனுறை உத்திர ரங்கநாத சுவாமிக்கு சிறப்பு அபி?ஷகம், அலங்காரம் செய்து, தேரில் வைத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக அழைத்து வந்தனர். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.