திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பெருவிழாவை ஒட்டி,
சொக்கம்மன் நேற்று, சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்
பாலித்தார். திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும்
நடைபெறும் சித்திரை பெருவிழா, இந்தாண்டு ஏப்ரல் 29ல் துவங்கி, மே 10 வரை
நடைபெறுகிறது.இதை ஒட்டி இக்கோவிலை சார்ந்தகிரிவலப்பாதையில்
அமைந்துள்ள,திருமலை சொக்கம்மன் கோவிலில், 11 நாட்களிலும் சிறப்பு அபிஷேகம்
நடைபெறும்.இதில் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன் தினம், திருமலை
சொக்கம்மனுக்கு சந்தன காப்பு மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு,
பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், செயல் அலுவலர் தியாகராஜன், கோவில்
அர்ச்சகர் ராஜேந்திரன், உபயதாரர் வேலாயுதம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.