பாலமலை அரங்கநாதர் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மே 2017 12:05
பெ.நா.பாளையம்: கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை அரங்கநாதர் கோவிலில் சித்ரா பவுர்ணமி தேர்த்திருவிழா கொடியேற்றுத்துடன் துவங்கியது. கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து, 10 கி.மீ., தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையில் பாலமலை அரங்கநாதர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி தேர்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்தாண்டு திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று பெருமாள் அன்னவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று அனுமந்த வாகனத்தில் எழுந்தருளுகிறார், நாளை காலை கருடவாகனம், 8ல் செங்கோதையம்மன் அழைப்பு, 9ல் திருக்கல்யாண உற்சவம், 10ல் மாலை, 5:00 மணிக்கு திருத்தேர் உற்சவம் வடம் பிடித்தல் நடக்கிறது. தொடர்ந்து, 11ல் பரிவேட்டை, 12ல் சேஷ வாகன உற்சவம், 13ல் சந்தன சேவை சாற்றுமுறை உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகள் கோவில் பரம்பரை அறங்காவலர் ஜெகதீசன் தலைமையில் நடந்து வருகிறது.